Book of 1 நாளாகமம் in Tamil Bible

1 நாளாகமம் - "ஆதாம் முதல் தாவீது வரை வம்சாவளி - தாவீதின் ஆட்சி"

 

முகவுரை:

துவக்கத்தில் நாளாகமங்களும் ஒரே புத்தகமாகத்தான் இருந்தன. பின்புதான் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டன. சாமுவேலின் ஆகமங்களிலும், ராஜாக்களின் புத்தகங்களிலும் உள்ள ராஜாக்களின் காலங்களையும் சம்பவங்களையுமே நாளாகமங்களும் குறிப்பதாக இருந்தாலும், இதில் சில முக்கியமான வேற்றுமைகள் உள்ளன:

முதலாவதாக, சாமுவேல் மற்றும் ராஜாக்களின் புத்தகத்தில் காணப்படுகிற பாவம் மற்றும் அதன் விளைவுகளைக்குறித்த அழுத்திக்கூறுதல் நாளாகமங்களில் காணப்படவில்லை. பாவத்தைக்குறித்த காரியம், நாளாகமங்களில் தேவனுடைய மன்னிப்பின் வெளிச்சத்தில் பார்க்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு ராஜாக்களின் புத்தகம் மனாசேயை ஒரு பாவியாகக் காட்டுகிறது, ஆனால் நாளாகமமோ அவன் பாவத்திலிருந்து மனந்திரும்பியதையும் காட்டுகிறது.

2ராஜா-21: 1-9 மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான், அவன் தாயின் பெயர் எப்சிபாள்.

2. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, 3. தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளைச் சேவித்தான்.

4. எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக்குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,

5. கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி,

6. தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம் பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறி சொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்.

7. இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றைக்கும் விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லிக் குறித்த ஆலயத்திலே அவன் பண்ணின தோப்புவிக்கிரகத்தை வைத்தான்.

8. நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின் படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப் பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாய் இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தைவிட்டு அலையப் பண்ணுவதில்லை என்று சொல்லியிருந்தார்.

9. ஆனாலும் அவர்கள் கேளாதேபோனார்கள், கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகள் செய்த பொல்லாப்பைப் பார்க்கிலும் அதிகமாய்ச் செய்ய மனாசே அவர்களை ஏவிவிட்டான்.

2 நாளாகமம் 33: 9-16 அப்படியே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப் பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப் போகப்பண்ணினான்.

10. கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்.

11. ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார், அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

12. இப்படி அவன் நெருக்கப்படுகையில் தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். 13. அவரை நோக்கி, அவன் விண்ணப்பம் பண்ணிக் கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார், கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.

14. பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்கு தொடங்கி மீன்வாசல்மட்டும் கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தலைவரை வைத்து,

15. கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப் புறம்பாகப் போடுவித்து,

16. கர்த்தருடைய பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதின்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான்.

  • இரண்டாவதாக, ராஜாக்களின் காலத்தில் தேவாலயம் மற்றும் ஆராதனையை வலியுறுத்தி ஆசாரியத்துவத்தை முக்கியப் படுத்துவதை நாளாகமத்தின் புத்தகத்தங்கள் செய்கின்றன.
  • மூன்றாவதாக, நாளாகமங்கள் யூதேயாவின் ராஜக்களின்மீது அதிகக் கவனம் செலுத்துகிறது. இஸ்ரவேலின் 8 ராஜாக்கள் மாத்திரமே இதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளனர்.
  • இறுதியாக, எழுதியவர்கள்: சாமுவேல், நாத்தான் மற்றும் காத் தீர்க்கதரிசிகளால் சாமுவேலின் புத்தகம் எழுதப்பட்டது, எரேமியாவால் ராஜாக்களின் புத்தகம் எழுதப்பட்டது, நாளாகமப் புத்தகம் எஸ்றாவால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.

மத்தேயு 23: 35 நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.

2 நாளாகமம் 24: 20-21 அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார், நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான். அதினால் அவர்கள் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கற்பனையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

1 நாளாகமத்தின் தொகுப்பு:

(மொத்தம் 29 அதிகாரங்கள் உள்ளன. இவைகளை 3 பகுதிகளாகப் பிரிக்கலாம்)

நாளாகமம் என்பதற்கு, ஆங்கிலத்தில் (Chronicles)என்று உள்ளது. இதற்கு நாட்களின் செய்கைகள் (Acts of the Days) என்று அர்த்தமாகும். அதாவது ராஜாக்களின் நாட்களில் செய்யப் பட்டவைகளைக் குறித்து இந்த ஆகமங்கள் விவரிக்கின்றன.

I. அதிகாரங்கள் 1 முதல் 9 வரை: வம்சவரலாறு:
  1. ஆதாம் முதல் தாவீது வரையிலான வம்சவரலாறு முதல் 9 அதிகாரங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 அதிகாரங்களில் தாவீதின் ராஜ்யத்தைக்குறித்த சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
  2. இதேபோல 2ஆம் நாளாகமத்தின் முதல் 9 அதிகாரங்களில் சாலோமோனின் சரித்திரம் உள்ளடக்கப் பட்டுள்ளது. மீதமுள்ள அதிகாரங்களில் யூதேயா ராஜ்யத்தின் ராஜாக்களுடைய செய்கைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

யாபேஸின் விண்ணப்பம்:

1 நாளாகமம் 4: 9-10 யாபேஸ் தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டாள். யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப் படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான், அவன் வேண்டிக் கொண்டதைத் தேவன் அருளினார்.

ரூபனின் பாவம்:

1 நாளாகமம் 5: 1 ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன், ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப் படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற்பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.

II. அதிகாரம் 10 சவுலின் முடிவு

1 நாளாகமம் 10: 13-14 அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத் தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான். 14. அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார்.

III. அதிகாரங்கள் 11 முதல் 29 தாவீதின் ராஜ்யம்
  1. தாவீதின் ராணுவம் (11-12)
  2. உடன்படிக்கைப் பெட்டி (13-16)

1 நாளாகமம் 13: 3 நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்துக்குக் கொண்டுவருவோமாக, சவுலின் நாட்களில் அதைத் தேடாதேபோனோம் என்றான்.

1 நாளாகமம் 13: 9-10 அவர்கள் கீதோனின் களமட்டும் வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான். அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன் கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார், அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.

1 நாளாகமம் 13: 14 தேவனுடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.

  1. ஆலயம் கட்டுவதற்கென்று உடன்படிக்கை (17)

1 நாளாகமம் 17: 10-20 இப்போதும் கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்பதை உனக்கு அறிவிக்கிறேன்.

11. நீ உன் பிதாக்களிடத்திலே போக, உன் நாட்கள் நிறைவேறும்போது, நான் உனக்குப்பின்பு உன் புத்திரால் ஒருவனாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.

12. அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான், அவன் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப் பண்ணுவேன்.

13. நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான், உனக்கு முன்னிருந்தவனை விட்டு என் கிருபையை நான் விலகப் பண்ணினதுபோல, அவனை விட்டு விலகப்பண்ணாமல்,

14. அவனை என் ஆலயத்திலும் என் ராஜ்யத்திலும் என்றென்றைக்கும் நிலைக்கப் பண்ணுவேன், (இயேசுவைக்குறித்த தீர்க்கதரிசனம்) அவனுடைய ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று சொல் என்றார்.

15. நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின் படியும் இந்த எல்லாத் தரிசனத்தின்படியும் தாவீதுக்குச் சொன்னான்.

16. அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்

17. தேவனே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்சக் காரியமாயிருக்கிறது என்று தேவனான கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானுடைய வீட்டைக்குறித்து வெகு தூரமாயிருக்கும் காலத்துச் செய்தியையும் சொல்லி, என்னை மகா மேன்மையான சந்ததியின் மனுஷனாகப் பார்த்தீர்.

18. உமது அடியானுக்கு உண்டாகும் கனத்தைப்பற்றி, தாவீது அப்புறம் உம்மோடே சொல்வது என்ன? தேவரீர் உமது அடியானை அறிவீர்

19. கர்த்தாவே, உமது அடியானின் நிமித்தமும், உமது இருதயத்தின்படியும், இந்தப் பெரிய காரியங் களையெல்லாம் அறியப் பண்ணும்படிக்கு, இந்தப் பெரிய காரியத்தையெல்லாம் ன்னிப்பதிலும், மனந்திரும்பு வதற்காச்செய்தீர்.

20. கர்த்தாவே, நாங்கள் எங்கள் காதுகளால் கேட்ட எல்லாவற்றின்படியும் தேவரீருக்கு நிகரானவர் இல்லை, உம்மைத்தவிர தேவனும் இல்லை.

  1. யுத்தங்களும் ஜெயமும் (18)
  2. அம்மோனியரும் சீரியாவும் (19-20)
  3. கணக்கெடுத்தல் (21)

1 நாளாகமம் 21: 1 சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகை இடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.

தாவீதின் மனந்திரும்புதல்:

1 நாளாகமம் 21: 7-8 இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாத தானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார். தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ்செய்தேன், இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும், வெகுபுத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.

மன்னிப்பதிலும், மனந் திரும்புவதற்கான வாய்ப்பைக் கொடுப்பதிலும் தேவனுடைய இரக்கம் வெளிப் படுத்தப்படுவதை நாம் பார்க்கிறோம்.

  1. தேவாலயம் கட்டுவதற்குரிய ஆயத்தம் (22-29)

தேவாலயம் தேவனுடைய நாமம் மகிமைப்படுவதற்கும், தேவனுடைய பிரசன்னம் வாசம் பண்ணுதலுக்கும் உரிய இடமாகும். பழைய ஏற்பாட்டில் கைகளால் செய்யப்பட்ட ஆலயம் காணப்பட்டது. இப்பொழுதோ மனிதர்கள்தான் தேவனுடைய ஆலயமாக இருக்கிறார்கள். மக்களுடைய வாழ்வு தேவனுடைய பிரசன்னம் தங்கும் இடமாக ஆதாயப்படுத்தபட்டு, உருவாக்கப் படவேண்டும். அதற்கு வேண்டியவைகளை நாம் ஆயத்தப்படுத்திட வேண்டும்.

அப்போஸ்தலர் 17: 24 உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிற படியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம் பண்ணுகிறதில்லை.

2கொரி-6: 16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப் பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலய மாயிருக்கிறீர்களே.

1 கொரிந்தியர்6: 19 உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிற தென்றும், நீங்கள் உங்களுடையவர்கள் அல்லவென்றும் அறியீர்களா?

Unveiling the Rich History and Lessons of 1 Chronicles in the Bible

Introduction: Understanding the Significance of 1 Chronicles in the Biblical Narrative

1 Chronicles, historical books of the Bible, genealogy in the Bible, biblical narratives

The Genealogical Accounts and Historical Records in 1 Chronicles

genealogy in 1 Chronicles, family lineage in the Bible, historical records, King David's descendants

The Role of Worship and Temple Building in 1 Chronicles

worship practices in 1 Chronicles, construction of Solomon's Temple, Levitical duties

Leadership Lessons from Chronicles and Rulers Mentioned in 1 Chronicles

Chronicles mentioned in 1 Chronicles, leadership qualities, lessons from King David's reign

Spiritual Insights and Lessons for Modern Believers from 1 Chronicles

Spiritual lessons from 1 Chronicles, faithfulness to God's commands, seeking God's guidance

Conclusion: Embracing the Wisdom and Teachings Found within 1 Chronicles for Personal Growth and Spiritual Development