1 சாமுவேல் - "சாமுவேலின் தலைமை; சவுல் மற்றும் தாவீதின் உயர்வு"
முகவுரை:
1 சாமுவேலும் 2 சாமுவேலும் துவக்கத்தில் (எபிரேய மொழியில்) ஒரே புத்தகமாகத்தான் இருந்தன. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பின்போது சாமுவேலின் புத்தகத்தையும் ராஜாக்களின் புத்தகத்தையும் ஒன்றாகத் தொகுத்து 4 பிரிவுகளாகப் பிரித்தார்கள். இந்தப் புத்தகத்தில் 3 முக்கிய நபர்களைப் பார்க்கவிருக்கிறோம். கடைசி நியாயாதிபதியாகிய சாமுவேல், முதல் ராஜாவான சவுல், ஆடுமேய்த்து அரசனாகிய தாவீது (இவர் தேவனுடைய இருயதத்திற்கு ஏற்றவராயிருந்தார்). சவுல் என்றால் கேட்கப்பட்டவர் என்று அர்த்தமாகும். இஸ்ரவேல் ஜனங்கள் கேட்டதால் சவுல் ராஜாவாக்கப்பட்டு வந்தார். தாவீது என்றால் பிரியமானவன் என்று அர்த்தமாகும்.
சாமுவேலின் இரண்டு புத்தகங்களும் தேவனை ராஜாவாகக் கொண்டிருக்கவேண்டிய இஸ்ரவேல் ஜனங்கள், மனித ராஜாங்கத்தைத் தெரிந்தெடுத்தலுக்குள் மாறுவதைக்குறித்த முக்கியக் குறிப்பைக் கொடுக்கின்றன. தான் அவர்களுக்கு ராஜாவாக இருக்கவேண்டும், அவர்கள் தன்னுடைய ஆளுகையில் எப்பொதும் இருக்கவேண்டும் என்பதே இஸ்ரவேலரைக் குறித்த தேவனுடைய விருப்பமாக இருந்தது. ஆனால் மற்ற தேசங்களையும் அவைகள் ராஜாக்களையும் உடையவர்களாக இருப்பதை இஸ்ரவேலர்கள் பார்த்தபோது தங்களுக்கும் அவர்களைப்போல மனிதராஜா வேண்டும் என்று ஆசைப்பட ஆரம்பித்தனர்.
நியாயாதிபதிகளில் வருகிற ஒரு முக்கியமான வசனத்தை நினைப்பூட்ட விரும்புகிறேன். நியாயாதிபதிகள் 17: 6, 21: 25 அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிபோனபடி செய்துவந்தான்.
நியாயாதிபதியாகளில் கடைசியாக வாழ்ந்தவர் சாமுவேல் ஆவார். இறுதியில் இவர் மக்களால் புறக்கணிக்கப்பட்டார், அவரிடத்தில் மக்கள் வந்து கேட்டதைக் கவனியுங்கள். 1 சாமுவேல் 8: 5-6 இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர், உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை, ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள். 6. எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது, ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.
இதைக்குறித்த வேதக்குறிப்புகள்:
1 சாமுவேல் 8: 7 அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள், அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.
1 சாமுவேல் 10: 19 நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்.
1 சாமுவேல் 12: 19 சாமுவேலைப் பார்த்து: நாங்கள் சாகாதபடிக்கு உம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் உம்முடைய அடியாருக்காக விண்ணப்பம்செய்யும், நாங்கள் செய்த எல்லாப் பாவங்களோடும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்ட இந்தப் பாவத்தையும் கூட்டிக் கொண்டோம் என்று ஜனங்கள் எல்லாரும் சொன்னார்கள்.
தேவன் ஏற்கெனவே சொல்லியிருந்தது என்ன?
உபாகமம் 17: 14-15 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச்சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும்போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால், 15. உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய், உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய், உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது.
மனிதராஜா ஏற்படுத்தப்படுவதற்கு முன்பே, இப்படி நடக்கும் என்று தேவன் முன்னறிந்து, அறிவித்திருந்தார் என்பதை உபாகமம்-28: 36 தெரிவிக்கிறது. கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார், அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய்.
தேவனுடைய உண்மையான விருப்பமாக இல்லாதபோதும், மனிதன் விரும்புகிறான் என்பதற்காக தேவன் அனுமதித்து பதில்கொடுப்பதை நாம் இங்கே பார்க்கிறோம். தேவனுடைய பரிபூரண சித்தம் என்பதும் தேவனால் அனுமதிக்கப்படும் சித்தம் என்பதும் நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாக இருக்கிறது.
சங்கீதம் 106: 15 அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்.
அவர் கொடுப்பதை நாம் பெறுவது தேவசித்தம், நாம் கேட்பதை அவர் கொடுப்பது தேவன் அனுதிக்கும் சித்தம்.
எண்ணாகமம் 22: 20 இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து: அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடே கூடப்போ, ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார்.
யார் இந்த சாமுவேல்?
சாமுவேல் என்றால் அவர் பெயர் தேவன் என்று அர்த்தமாகும்.
- மலடியாக இருந்த அன்னாளின் ஜெபத்தினால் பெற்றெடுக்கப்பட்டவர்.
1 சாமுவேல் 1: 11 சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகலநாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன், அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.
- சிறுவயதிலிருந்தே கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தவர்
1 சாமுவேல் 1: 28. ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்ட படியினால், அவன் உயிரோடிருக்கும் சகலநாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள், அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.
1 சாமுவேல் 2: 21 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்.
- சிறுவயதிலேயே தேவனுடைய கூப்பிடுதலின் சத்தத்தைக் கேட்டவர்:
1 சாமுவேல் 3: 4-5,10 அப்பொழுது கர்த்தர் சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன் இதோ, இருக்கிறேன் என்று சொல்லி, ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன், என்னைக் கூப்பிட்டீரே என்றான். 10. அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே என்று கூப்பிட்டார், அதற்குச் சாமுவேல்: சொல்லும், அடியேன் கேட்கிறேன் என்றான்.
- தீர்க்கதரிசியாகவும் நியாயாதிபதியாகவும் செயல்பட்டவர்:
- சவுலையும் தாவீதையும் ராஜாவாக அபிஷேகம் பண்ணினவர்:
1 சாமுவேல் 10: 1 அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்திரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணினார் அல்லவா?
1 சாமுவேல் 16: 13 அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம் பண்ணினான், அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்.
இதிலே மூன்று முக்கிய நபர்களைக் குறித்து நாம் பார்க்கிறோம் என்று சொன்னேன்.
I. சாமுவேல் - மக்களால் புறக்கணிக்கப்பட்ட நியாயாதிபதி
†மக்கள் மனிதராஜாவை விரும்பியது, சாமுவேல் தன் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கத் தவறியது.
†சாமு-8: 1-5 சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான். 2. அவனுடைய மூத்த குமாரனுக்குப் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா, அவர்கள் பெயொர்செபாவிலே நியாயாதிபதிகளாய் இருந்தார்கள். 3. ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள். 4. அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பா; எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து: 5. இதோ, நீர் முதிர் வயதுள்ளவரானீர், உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை, ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.
II. சவுல் - தேவனால் புறக்கணிக்கப்பட்ட ராஜா
•கீழ்படியாமை
•1 சாமுவேல் 15: 1-3,9 பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே, இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்: 2. சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். 3. இப்பொழுதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம்வைக்காமல், புருஷரையும், ஸ்திரிகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும்,
மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தர மானவைகளையும், இரண்டாந்தர மானவைகளையும், ஆட்டுக் குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டான்.
சாமு-15: 22 அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
II. தாவீது தேவனாலும் மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ராஜா
↳தாழ்மை
↳மனந்திரும்புதல்
↳தேவனைத் துதித்தல்
↳ஆராதித்தல்
1 சாமுவேல் 16: 7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரிர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம், நான் இவனைப் புறக்கணித்தேன், மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன், மனுஷன் முகத்தைப் பார்ப்பான், கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.
1ஆம் சாமுவேலின் தொகுப்பு:
(மொத்தம் 31 அதிகாரங்கள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்)
- அதிகாரங்கள் 1 முதல் 7
சாமுவேலின் பிறப்பு, அவருடைய ஊழியங்கள்
- அதிகாரங்கள் 8 முதல் 15
- மக்கள் ராஜாவைக் கேட்டல் (8)
- சவுல் ராஜா ஏற்படுத்தப்படுதல் (9-12)
- சவுல் ராஜாவின் தோல்விகள் (13-15)
III. அதிகாரங்கள் 16 முதல் 31:
- தாவீது அபிஷேகிக்கப்படுதல் (16)
- தாவீது புகழப்படுதல் - கோலிஆதியாகமம் வீழ்த்தப்படுதல் (17-18)
- தாவீது துரத்தப்படுதல் - சவுலின் விரோதம் (18-26)
- தாவீது அமலேக்கியரைப் பழிவாங்குதல் (27-31)
1 சாமுவேல் 30: 6 தாவீது மிகவும் நெருக்கப்பட்டான், சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளின் நிமித்தம் மனக் கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக் கொண்டார்கள், தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப் படுத்திக்கொண்டான்.