சங்கீதம் - * நீதியான ஆட்சி உறுதி *



* நீதியான ஆட்சி உறுதி *


தமிழ் வேதாகமம்சங்கீதம்அதிகாரம் - 101




உறுதியான அன்பு மற்றும் நீதி



1. இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

2. உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.

3. தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.

4. மாறுபாடான இருதயம் என்னைவிட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன்.

5. பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.

6. தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்.

7. கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.

8. அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்.



101
home



உறுதியான அன்பு மற்றும் நீதியைப் பாடுவதைப் பற்றி தாவீது பேசுகிறார். அவர் நேர்மையுடன் நடப்பதாகவும், பயனற்ற விஷயங்களைத் தன் கண்களுக்கு முன்பாக வைக்கக்கூடாது என்றும் சபதம் செய்கிறார். தேசத்திலுள்ள எல்லாப் பொல்லாதவர்களையும் அழித்துவிடுவதைக் காலைக்குக் காலைப் பேசுகிறார்.