சங்கீதம் - * கர்த்தரைப் புகழ்ந்து பாடுதல். *
* கர்த்தரைப் புகழ்ந்து பாடுதல். *
கர்த்தருடைய ஊழியர்களை கர்த்தரை ஸ்தோத்திரிக்க சங்கீதக்காரர் அழைக்கிறார்.
1. இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
2. உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
3. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.