I. தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசித்தல்
விதைக்கிறவனும் விதையும்:
1 மூன்று வகையான கெட்ட நிலங்கள் மற்றும் மூன்று வகையான நல்ல நிலங்கள் (30, 60 & 100). - (மாற்கு 4:3-8; லூக்கா 8:15)
கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள்:
2 இலவசமாக வழங்கப்பட்ட கலியாண வஸ்திரத்தை அணிய மறுத்த மனிதன். - (மத் 22:2-14)
மணல் மற்றும் கன்மலையின் மேல் கட்டின வீடு:
3 கீழ்ப்படிதல் - ஒரு நல்லதோர் அஸ்திபாரத்தின் முக்கியத்துவம். - (மத் 7:24-27)
II. விலைகிரையம் செலுத்துதல்
அறுவடைக்கு எற்ற பருவகாலம்:
4 ஆவியின் பிரமாணங்களை நாம் பின்பற்றினால், வளர்ச்சி எளிதாகும். - (மத் 4:26-29)
கடுகு மரம்:
5 செயற்கையான வளர்ச்சியை சாத்தானின் ஏவலர்களை (Agents) நம் நடுவில் குடியேறும்படி அழைக்கிறது. - (மத் 13:31, 32)
ஒரு கோபுரத்தைக் கட்டுதல்:
6 "சீஷர்களை - உருவாக்குதல்" (வசனம்.26,27,33) மட்டுமே கோபுரத்தை கட்ட உதவும். - (மத் 14:28-30)
சத்ருவை எதிர்த்தல்:
7 தேவன் ஒரு சிலருடன் இருந்து சத்துருக்கு விரோதமாய் யுத்தம் செய்வார் - அவர்கள் முழு இருதயமுள்ளவர்களாய் இருந்தால். - (லூக்கா 14:31, 32)
மறைவான பொக்கிஷம்:
8 கிறிஸ்தவ வாழ்க்கையில் சிலவற்றுக்காக நாம் விலைகிரயம் செலுத்த வேண்டும். - (மத் 13:44)
விலையுயர்ந்த முத்து:
9 எல்லாவற்றிற்கும் மேலாக நம்மில் இயேசுவே விலையேறப் பெற்றவராக இருக்க வேண்டும். - (மத் 13:45, 46)
III. தேவனையும் மனிதரையும் அன்புகூர்தல்
இரண்டு கடனாளிகள்:
10 தேவன் மீதான அன்பு, நாம் எவ்வளவு மன்னிக்கப்பட்டோம் என்பதை அறிவதின் மூலமாகவே வரும். - (லூக்கா 7:41-43)
பிறனை மன்னிக்காத வேலைக்காரன்:
11 நாம் எல்லோரையும் மன்னிக்க வேண்டும், ஏனென்றால் நாம் அவ்வளவாய் மன்னிக்கப்பட்டிருக்கறோம். - (மத் 18:23-35)
நல்ல சமாரியன்:
12 நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் தேவைகளைக் குறித்து விழிப்பாய் இருக்க வேண்டும் - முதலாவது நம் குடும்பமே. - (லூக்கா 10:30-37)
செம்மறியாடும் வெள்ளாடும்:
13 "நீதிமான்கள்" தேவைகளில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு உதவுபவர். - (மத் 25:31-36)
IV. பிரமாணத்துவத்தின் ஆபத்து
இரண்டு குமாரர்கள்:
14 பரிசேயர்களைப் போலல்லாமல் - நாம் தேவனிடத்தில் சொல்வதை அறிந்துணர்ந்து இருக்க வேண்டும். - (மத் 21:28-31)
குருடனுக்குக் வழிகாட்டும் குருடன்:
15 நாம் பிரசங்கிக்கிற காரியங்களை நாமே செய்யாவிட்டால், நாம் ஆவிக்குரிய குருடர். - (லூக்கா 6:39, 40)
கோதுமையும் களைகளும்:
16 வெளிப்புறத்தில் - மாய்மாலக்காரர்கள் விசுவாசிகளை போலவே இருப்பார்கள். - (மத் 13:24-30)
அத்திப் பழங்கள் இல்லாத அத்திமரம்:
17 அத்தி-இலைகள் மனிதனுடைய நீதியை அடையாளப்படுத்துகின்றன - தேவனால் சபிக்கப்பட்டது. - (மத் 13:6-9)
பழைய வஸ்திரத்தில் புதிய வஸ்திரம்:
18 உங்கள் ஆதாமின் வாழ்க்கையில் கிறிஸ்துவின் ஜீவனை ஒட்டுப் போட முடியாது. - (மத் 9:16)
பழைய துருத்தியில் புதிய திராட்சைரசம்:
19 கிருபையானது (புதிய திராட்சைரசம்) மார்க அமைப்பில் பொருந்தாது. - (மத் 9:17)
புத்தியுள்ள கன்னிகைகளும், புத்தியில்லாத கன்னிகளும்:
20 கிறிஸ்துவின் மேலுள்ள நேசத்தினால் (எண்ணெய்) மட்டுமே என்றென்றும் நம் ஒளியைப் பிரகாசிக்க செய்திடும். - (மத் 25:1-13)
V. நான்கு விதமான பின்மாற்றக்காரர்கள்
காணாமல்போன ஆடு:
21 விசுவாசிகளோடு உள்ள ஐக்கிய குறைவு மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையில் கவனக்குறைவின் மூலமாக சிலர் வழி தவறி செல்லுகின்றனர். - (லூக்கா 15:3-7)
காணாமற்போன வெள்ளிக்காசு:
22 சபையின் தோல்வி மற்றும் உதாசீனம் (Neglect) மூலமாக சிலர் வழி தவறி செல்லுகின்றனர். - (லூக்கா 15:8-10)
காணாமல்போன இளையகுமாரன் மற்றும் மூத்தக்குமாரன்:
23 முரட்டாட்டம் மற்றும் ஆவிக்குரிய அகந்தையின் மூலமாக சிலர் வழி தவறி செல்லுகின்றனர். - (லூக்கா 15:11-32)
புளித்த மா:
24 சீர்கேடு எந்த சபையிலும் எளிதாக பரவிடும், ஆகையால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். - (மத் 13:33)
VI. ஆவிக்குரிய பெருமை
கலியாண விருந்தில் அமறுதல்:
25 இயேசு செய்தது போலவே எப்பொழுதும் தாழ்ந்த இடத்தையே தேடுங்கள். - (லூக்கா 14:7-11)
திராட்சத்தோட்டத்து வேலையாட்கள்:
26 தேவனிடத்தில் தங்கள் வாழ்க்கையின் இறுதியில் வருபவருக்கும் நம்பிக்கை உண்டு. - (மத் 20:1-16)
எஜமானனும், அடிமையும்:
27 எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்திருந்தும் நாம் இன்னும் தகுதியற்றவர்களே. - (லூக்கா 17:7-10)
பரிசேயன் மற்றும் ஆயக்காரன்:
28 பெருமையுள்ளவர்களுக்கும், மற்றவர்களை இழிவுபடுத்துகிறவர்களுக்கும் தேவன் எதிர்த்து நிற்கிறார். - (லூக்கா 18:9-14)
சந்தை வெளியில் இருக்கும் பிள்ளைகள்:
29 நாம் செய்வது எதுவானாலும் மார்க்கவாதிகள் அதை விமர்சனம் செய்வார்கள். - (லூக்கா 7:31-35)
VII. விழித்திருந்து ஜெபம் பண்ணுதல்
உறுதியான விதவை:
30 ஒரு பலவீனமான விசுவாசி தன்னுடைய பரலோகத் தகப்பனுடன் ஜெபத்தில் மேம்பட முடியும். - (லூக்கா 18:1-8)
உறுதியான அயலான்:
31 மற்றவர்களுக்கு உதவி செய்திட நாம் ஆவியின் வரங்களை நாட வேண்டும். - (லூக்கா 11:5-8)
தகப்பனும் பிள்ளைகளும்:
32 பூமிக்குரிய மிகச்சிறந்த தகப்பனைக் காட்டிலும் தேவன் மேலானவர். - (லூக்கா 11:11-13)
விழித்திருக்கும் வேலையாள்:
33 நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - குறிப்பாக காவல்கார்கள். - (மத் 24:45-51; மாற்கு 13:34)
அத்தி மரமும் பிற மரங்களும்:
34 தங்கள் தேசத்திற்கு இஸ்ரவேலர்கள் திரும்பி வருதலே கிறிஸ்துவின் வருகையின் அடையாளம். - (லூக்கா 21:29-32)
VIII. தேவனுடைய வரங்களில் உண்மையாய் இருத்தல்
பொல்லாத குத்தகைதாரர்:
35 நாம் எல்லோருமே தேவனிடத்தில் கடன் பெற்றுள்ளோம் - அதற்காக நாம் கணக்குக் ஒப்புவிக்க வேண்டும். - (மத் 21:33-41)
மதிகேடான ஐசுவரியவான்:
36 பூமிக்குரிய ஜீவியத்திலும், பொருட்களிலும் தேவனிடத்தில் ஐஸ்வரியவானாய் இல்லாதவன் மதிகேடன். - (லூக்கா 12:16-21)
தாலந்து- 5,2 மற்றும் 1:
37 தேவன் நமக்கு அருளும் சிறு வரங்களில் உண்மையாய் இருத்தல் வேண்டும். - (மத் 25:14-30)
மினாக்கள் - 1 ஒவ்வொருவர்:
38 நேரம் ஒரு வரம், தேவன் நம் எல்லாருக்கும் சமமாகவே பகிர்ந்து அளித்துள்ளார். - (லூக்கா 19:12-27)
நேர்மையற்ற உக்கிராணக்காரன்:
39 பரலோகத்திற்காக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ள பணம் மற்றும் பொருள்களை நாம் பயன்படுத்த வேண்டும். - (லூக்கா 16:1-8)
நல்ல மற்றும் கெட்ட மீன்கள்:
40 இறுதியில் தேவன் தம் ஜனங்களை மற்றவர்களிடமிருந்து நித்திய நித்தியமாய் பிரித்தெடுப்பார். - (மத் 13:47, 48)